வைகோ தலைமையில் இன்று போராட்டம்

vaiko2இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமியின் தலைமையில் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சர்வதேச விசாரணைக்குழு, இந்தியாவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்க வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply