இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான மிகவும் நம்பகரமான ஆதாரங்கள் பல்வேறு ஊடகங்களால் வெளியிடப்பட்டு அவற்றின் நம்பகத் தன்மை துறைசார்ந்த வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் குறிப்பிட்டு போராட்டங்களை நடத்தியபோதும் மனித உரிமை மீறல்கள் என்றும் போர்க்குற்றங்கள் என்றுமே ஐ.நாவும் சில நாடுகளும் அடையாளப்படுத்தும் நிலையில் எப்படியான விசாரணையையும் அனுமதிக்க முடியாது என்ற நிலையை இலங்கை அரசாங்கம் பல்வேறு வகையிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எதற்கெடுத்தாலும் தனது நாட்டின் கதவுகள் திறந்தே உள்ளன, யார் வேண்டுமானாலும் வந்து உண்மையை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஐ.நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் போன்றவர்கள் நாட்டிற்கு வந்தபோது வடக்கில் சென்று உண்மை நிலைமைகளை அவதானியுங்கள் என்றார். அவர்கள் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்ததுடன் அவர்கள் நிலமில்லாமல் வாழும் வாழ்க்கையை நேரில் கண்டனர். காணாமல் போனவர்களின் துயரக்கோலங்களை கண்டனர். இலங்கையில் ஒரு திட்டமிட்ட இன அழிப்பு நடைபெறுவது இந்த உலகத்திற்கு அம்பலமாகியுள்ளது.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்னமும் கண்ணீரோடு வடக்கு மக்கள் அலைகிறார்கள். யுத்ததத்தின் இறுதியில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்த கையளிக்கப்ப்ட் பல ஆயிரக்கணக்கான போராளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பொதுமக்களுக்கும் இதுவரையில் என்ன நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. அரச படைகள் கொண்டு சென்ற அவர்களுக்கு என்ன ஆனது? அரச படைகள் அவர்களை தனது வாகனங்களில் ஏற்றிச்சென்றது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று இப்போது சொல்லுகிறது. போர் மாத்திரமின்றி போர் முடிந்த பின்னரும் எதற்காக அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்?
மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியம் வழங்கிய பலர் தமது கண்வனையும் பிள்ளைகளையும் படையினர் அவ்வாறு கையளித்தாக சாட்சியமளித்தார்கள். பல பொதுமக்கள் போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் பொதுமக்களும் அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டதை நேரில் கண்டதாகவும் சாட்சியளித்தார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அநிதிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினை எல்லாம் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுவே.
யுத்ததத்தில் காயப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், ஒருவரை ஒருவர் இழந்த உறவுகள் என்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் ஏதோ பாதிப்பிற்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். போர் முடிந்து ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அவர்களின் காயங்கள் ஆறவில்லை. அவர்கள் இன்னமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க இன ஒடுக்குமுறை நோக்கில் இனப்படுகொலை நோக்கில் நிகழ்த்தப்பட்ட போரில் ஈழ மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டனர். இனப்படுகொலைக்காக நிகழத்தப்பட்ட போரில் மிகவும் சுதந்திரமாகவும் கொடியதாகவும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. இவை ஈழ மக்களை வரலாறு முழுவதும் பல்வேறு வகையிலும் பாதிக்கக்கூடியது.
மனித குலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்களை இழைத்த இலங்கை அரசு எஞ்சியிருக்கும் மக்களையும் தொடர்ந்து அழித்துக்கொண்டு அந்த இன அழிப்பு நடவடிக்கை;கு நல்லிணக்கம் – சமாதானம் என்று பெயர் சூட்டியுள்ளது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து ஒரு விசாரணையை செய்ய வேண்டியதை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களும் ஐ.நாடுகள் சபை பிரதிநிதிகளும் உணர்ந்திருக்கின்றனர். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்வுக்குத் திரும்பவும் ஒட்டுமொத்த ஈழ மக்களுக்கும் ஒரு தீர்வினை எட்டவும் சர்வதேச விசாரணை அவசியமானது.
எல்லோரையும் வந்து பாருங்கள் எனது வாசல் திறந்தே இருக்கிறது என்று கூறும் இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஏன் ஐ.நா விசாரணைக் குழுவை இலங்கைக்கு அனுமதிக்க மறுக்கிறார்? போரை நடத்தும்போது சர்வதேச நாடுகள் யாவற்றினதும் ஆயுத அரசியல் உதவிகளைப் பெற்றுக்கொண்ட் மகிந்த ராஜபக்ச இப்போது அந்த நாடுகளின் விசாரணை உதவியை பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார். தான் இழைத்தது மிகப் பெரும் போர்க்குற்றம் என்பதும் தான் செய்தது மிகப் பெரும் இனப்படுகொலை என்பதும் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதைப்போலவே ஐ.நாவின் விசாரணை நடவடிக்கை;கு எதிரான ராஜபக்சவின் புலம்பல்கள் அமைகின்றன.
ஸ்ரீ;ரீலங்காப் பாராளுமன்றத்தில் சர்வதேச விசாரணையை அனுமதிகக்கூடாது என்ற தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தன் வசம் வைத்திருக்கும் ராஜபக்சே சர்வதேச விவாரணையை ஏற்பதா இல்iயா என்பதை பாராளுமன்றத்திடம் கேட்டு நழுவுகின்றார். நிறைவேற்ற அதிகாரத்தை தனது சொந்த தேவைகளுக்காகவும் இன அழிப்புத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் ராஜபக்சே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் உள்ள சிங்களப் பெரும்பான்மையைப் பயன்படுத்தியும் காய் நகர்த்துகின்றார்.
ஆனால் இந்தப் பாராளுமன்றத்தில் தமிழர்களால் எதையாவது செய்ய முடிந்திருந்தால், தமிழர்களுக்கு நீதி கிடைத்திருந்தால் ஏன் தமிழ் மக்கள் ஏன் ஸ்ரீரீலங்கா அரசுக்கு எதிராக கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாய் போராட வேண்டும்? இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழ் மக்களுக்கு ஸ்ரீPலங்காப் பாராளுமன்றத்தில் எதுவும் இல்லை என்பதும் தமிழ் மக்கள் இழந்த இடத்தை மீட்டு தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்பதையும் காலம் காலமாக உணர்த்தியிருக்கிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் லட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் ஈழ மக்களே. அவர்கள்தான் சர்வதேச விசாரணை வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். தீர்மானத்திற்கு எதிரான 10வாக்குகள் என்பது வடக்கு கிழக்கில் வாழும் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் வாக்குகள். அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். அவை ஸ்ரீரீலங்கா அரசு இழைத்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான சாட்சி. அந்த எண்ணிக்கையே ஸ்ரீ;ரீலங்காப் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான இடம் என்ற உண்மையை சிங்களப் பேரினவாதிகளும் இந்த உலகமும் அறியும்.
ராஜபக்ச மாத்திரமின்றி எல்லா ஜனாதிபதிகளும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்து இன அழிப்பு தொடங்கிய காலத்திலிருந்து எண்ணற்ற விசாரணைக்குழுக்கள் நியமித்துள்ளனர். அவர்கள் தாம் இழைத்த குற்றங்களிலிருந்து தப்பிக்கொள்ளவே தமக்கு ஏற்ற விசாரணைக் குழுக்களை நியமிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ராஜபக்சே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாhரணைக் குழுக்கள் என்றும் நிபுணர் குழு என்றும் நியமித்துள்ளார். இனப்படுகொலைக் குற்றம் சாட்டபவர்கள் ராஜபக்சேவின் குடும்பத்தினர். ஒரு இனப்படுகொலையாளி தானே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து தன்னையே விசாரிப்பது எப்படிச் சாத்தியமாகும்?
ஐ.நா விசாரணை நிபுணர் குழுவுக்கு இலங்கை விசா வழங்க மறுத்திருக்கிறது. அது மாத்திரமின்றி ஐ.நாவை இலங்கை அரசு ஏற்றக்கொள்ளவில்லை என்றும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தின் நடவடிக்கையோ சர்வதேச விசாரணைகளையோ, தம் மீதான குற்றச்சாட்டுக்களையோ எதையும் கணக்கில் எடுக்கப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே அரசு கூறுகிறது. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான பாரிய ஆதாரங்கள் இலங்கைக்கு வெளியில் காணப்படுவதாக நவநீதம்பிள்ளை கூறுகிறார். இலங்கை அரசின் இன்றைய நடவடிக்கைகளும் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான பாரிய ஆதாரங்களாகவே உள்ளன.
ஓரு நாட்டின் இறைமை என்பது ஓரு இனத்தை படுகொலை செய்வதெனில் அதை தடுக்க வேண்டியது உலக சமூகத்தின் பொறுப்பு. அதற்குப் பெயர் நாட்டின் இறைமை அல்ல. அது ஒரு இனத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான பழிச்செயல். அதை இலங்கைப் பாராளுமன்றம் அங்கிகரித்திருப்பது என்பது அந்தப் பழிச் செயலை ஒரு நாடு முழுமனதோடும் ஒத்துழைப்போடும் செய்கிறது என்று அர்த்தம். இலங்கையின் ஆளும்; பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதன் அடிப்படையில் வெறும் எண்ணிக்கைகளால் சர்வதேச விசாரணை குறித்து இலங்கை முடிவு செய்யுமென்றால், அதனை வைத்து சர்வதேச விசாரணையை நடத்துவதை ஸ்ரீரீலங்கா பாராளுமன்றம் எதிர்க்க முடியுமென்றால் அவ் விசாரணையை நடத்தவேண்டுமென பெருந்திரளான உலகத் தமிழர்களும் உலக சமூகமும் வலியுறுத்த முடியும்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈழ மக்களை சாட்சியமளிக்க தடுப்பது ஏன்? சர்வதேச விசாரணைக்கு இவ்வளவுக்கு அஞ்சுவது ஏன்? இவ்வாறான நிகழ்வுகள் எல்லாம் ஸ்ரீலங்கா அரசு எத்தகைய போர்க்குற்றத்தை இழைத்தது? எத்தகைய இனப் படுகொலையை புரிந்தது என்பதையே உணர்த்துகின்றது. இலங்கைக்கு வெளியில் பாரிய சாட்சிகள் காணப்படுவதாக நவநீதம்பிள்ளை கூறுவது உண்மையானது. ஆனால் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து ஈழத்தில் வாழக்கூடிய மக்கள் சாட்சியமளிக்க வேண்டும். அவர்கள் பல வித்திலும் அதைக் குறித்து சாட்சியம் அளித்துள்ளார்கள். ராஜபக்சவின் விசாரணைக்குழுவின் முன்பாகவும் மக்கள் துணிச்சலோடு சாட்சியமளித்துள்ளனர்.
இன அழிப்பது அல்லது இனப்படுகொலை என்பது போரில் கொத்துக் கொத்தாக கொன்றொழிப்பது மாத்திரமல்ல. ஓர் இனத்தின் நிலம், மொழி, பண்பாடு, வாழ்வியல், தொழில் என அனைத்துப் புலங்களிலும் மெல்ல மெல்ல திட்டமிட்ட அபகரிப்பையும் அழிப்பையும் மேற்கொண்டு அந்த இனத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையும் இன அழிப்பு அல்லது இனப்படுகொலையே. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய ஈழத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களை அவ்வாறே ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. போர்க்காலத்தில் நடக்கும் இனப்படுகொலையை இன அழிப்பைவிடவும் மறைமுகமான, மௌனமான இந்த அழிப்பு நடவடிக்கை பயங்கரமானதும் அபாயமானதுமாகும்.
எனவே சிங்கள அரசின் பேரினவாத ஒடுக்குமுறை நோக்கத்திற்காக ஈழத்தில் எமது இனத்திற்கு எதிராக கடந்த பல பத்து ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் போர்க்குற்றங்கள் குறித்து எமது மக்கள் சாட்சி அளிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து நீதியான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால்தான் ஈழத்தில் தொடரும் இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியும். இன அழிப்பிலிருந்து விடுதலை பெற இந்த தார்மீக கடமையை செய்தே நாம் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
















