தனது குண்டு மனைவியை விமானத்தில் ஏற்ற மறுத்து மூன்று விமான நிறுவனங்கள் மீது அவரது கணவர் $6 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் பதிவான இந்த வழக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த Vilma Soltesz, என்ற பெண் 185 கிலோ எடை உள்ளவராக இருந்தார். அவர் நியூயார்க் நகரை சுற்றி பார்க்க விரும்பியதால் அவருடைய கணவர் Delta விமான நிறுவனத்தில் இருவருக்கும் டிக்கெட் எடுத்தார். ஆனால் அவரது மனைவி மிகவும் குண்டாக இருப்பதால் அவரை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது என விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுபோலவே KLM மற்றும் Lufthansa ஆகிய விமான நிறுவனங்களும் அவரை விமானத்தில் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த Vilma Soltesz, சில நாட்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார்.
தன்னுடைய மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு மேற்கண்ட மூன்று விமான நிறுவனங்களே காரணம் என கூறி நியூயார்க் நீதிமன்றத்தில் Vilma Soltesz, அவர்களின் கணவர் $6 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு அவரது கணவர் Janos Soltesz, அவர்கள் விமான நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
















