உடலுறவுக்கு சம்மதியுங்கள்! சிறுமிகளை வேட்டையாடும் இராணுவ வீரர்கள் (வீடியோ இணைப்பு)

african_troopsசோமாலியாவில் உள்ள இராணுவ வீரர்கள் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் உறவுக்கு உட்படுத்தி வருவதாக மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) மனித உரிமைக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, புருண்டி(Burundi) யுகாண்டா (Uganda) போன்ற நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

மருத்துவ உதவி கேட்டு வரும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கும், ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர் தளங்களில் தங்கியுள்ள பெண்களுக்கும் இவர்கள் பாலியல் தொல்லை அளிக்கின்றனர்.

மேலும் உணவு உதவிப் பொருட்கள் கிடைக்க வேண்டுமானால், உடலுறவுக்கு உடன்பட வேண்டும் எனப் பெண்கள் மற்றும் சிறுமிகளையும் வற்புறுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனித உரிமைக் குழுவின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் இதுவரை பதிலளித்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply