ஆப்பிள் 6 அறிமுகம் செய்யப்பட்டது!

iphone6ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6+ வெளியிட்டார் ஆப்பிள் சிஇஓ டிம் குக்

இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகா ணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது.இந்நிறுவனத்தின் ஐ-பாட் மற்றும் ஐ-பேட் ஆகியன மிகவும் பிரபலமானவை. கருப்பு முகப்பு மற்றும் வெள்ளை நிறம் பின்பகுதியைக் கொண்டதாக இவை வெளி வருகின்றன. நிறுவனத்தின் லோகோ பின்புறம் இடம்பெற்றிருக்கும்.2007-ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மேக் கம்ப்யூட்டரை இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் அறிமுகப்படுத்தியிருந்தார். இதேபோல இப்போது ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 மற்றும் 6+ஐ இன்று வெளியிட்டது இதுவரை வெளியிடப்பட்ட ஐபோன்களில் இது சிறப்பு வாய்ந்தது என்றும், இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே வசதியும், திரையின் அளவு ஐபோன் 6 மற்றும் 6+ முறையே 4.70 இன்ச் / 5.5 இன்ச் என்ற அளவிலும், இதன் பிராஸசர் :Apple A8-Dual-core 2 GHz. இதுவரை வந்த ஐபோன்களிலேயே 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு பேட்டரி திறனும் கொண்டதாக இருக்கும் என அறிவித்துள்ளது. ஐஸ்டோரில் இந்த போனிற்கு 1.3 மில்லியன் ஆப்ஸ்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உள்ளக நினைவகம் :16/32/64/128 GB, இயங்குதளம் : iOS 8 எனவும் கூறியுள்ளது.

இது ஐபோன் 5Sஐவிட 185 மடங்கு அதிக பிக்ஸல் திறன் கொண்டது, திரையளவு : 1334 x 750 பிக்ஸலாக ஐபோன் 6றக்கும் மற்றும் 1920*1080வாக ஐபோன் 6+க்கு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட ஒலி உள்வாங்குதல்களை சிறப்பாக புரிந்து கொள்ளும் விதமாகவும்,கேமராவுடன் ஐசைட் எனும் கண்சிமிட்டினால் படம் பிடிக்கும் வசதியும் 8MP iSight camera, 1.5µ pixels, ƒ/2.2 aperture வசதியுடன் அனைத்து புதிய சென்சார் அமைப்பும் உள்ளது. நவீன கேமராக்களில் உள்ள டிஎஸ்.எல்.ஆர் வசதியை போன்ற ஃபோகஸ் அமைப்பு இதில் உள்ளது.ஒரு நொடியில் 120 மற்றும் 240 ப்ரேம்ஸ் என்ற அளவில் வீடியோ எடுக்கும் வசதி கொண்டது.இதில் Wi-Fi வசதி ஐபோன் 5Sஐ விட அதிகமாகவும், சிக்னல் இல்லாத இடங்களில் Wi-Fi காலிங் வசதியை பயன்படுத்தலாம் என ஆப்பிள் கூறியுள்ளது.

இதன் விலை ஐபோன் 6+க்கு 299 டாலரிலிருந்து 499 டாலர் வரையிலும்,ஐபோன் 6க்கு 199 டாலர் முதல் 399 டலர் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபோனிலிருந்து தனது முதல் ட்விட்டை பதிவு செய்துள்ளதாக அப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது குறித்த சர்ச்சையான செய்திகள் பல வந்தாலும் அதனை முறியடிக்கும் வகையில் ஆப்பிள் தனது புதிய தயாரிப்பான ஆப்பிள் 6 மற்றும் 6+ஐ வெற்றிகரமாக வெளியிட்டது.

ச.ஸ்ரீராம்
மா.அ.மோகன் பிரபாகரன்

Tags: ,

Leave a Reply