உலக மக்களை தற்போது புதியதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய் எபோலா நோய். இந்த வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதால் உயிர்ப்பலி அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை சுமார் 1800 பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோயால் சுமர் 3000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க தேவையான நிதியுதவியை அமெரிக்க வழங்கும் என ஒபாமா கூறியுள்ளார். ஆயினும் எபோலா பாதித்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா எபோலா நோய் ஒழிப்புக்கு போதுமான ஆதரவு தரவில்லை என நைஜீரிய மக்களிடையே கருத்து நிலவுகிறது. எனவே அமெரிக்கர்களை பழிவாங்க நேற்று நைஜீரியர் ஒருவர் அமெரிக்க ஏர்மார்ஷல் ஒருவருக்கு ஊசி மூலம் எபோலா வைரஸை செலுத்திவிட்டு மர்மமாக மறைந்துவிட்டார். உடனடியாக அந்த ஏர்மார்ஷல் அமெரிக்காவிற்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அவருக்கு தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏர்மார்ஷலுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் எபோலா வைரஸ் இருந்ததா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் அமெரிக்கா, இந்த நோய் தங்கள்நாட்டில் பரவாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏர்மார்ஷலுக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும், அவர் 24 மணிநேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
















