ஆசையை அடக்க முடியாத த்ரிஷா; அதிர்ச்சியில் காதலர்..!

trisha-ranaத்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் திருமணத்தை அடிக்கடி தள்ளிப்போட்டுகொண்டே வந்தனர். காரணம் த்ரிஷாவிற்கு இன்னும் நடிகையாக நடிக்கும் ஆசை குறையவில்லை. 31 வயதை கடந்தாலும் இன்னும் முன்னணி நடிகை பட்டியலில் தொடர்ந்து நடித்து வருகின்றார். சில மாதங்கள் முன்பு வரை படங்களே இல்லாமல் இருந்த த்ரிஷா தல 55 மற்றும் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். இதன் பிறகு வேறு வாய்ப்புகள் ஏதும் வராது எனவே, அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என ராணாவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமான பவர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இரண்டு ஆக்ஷன் படங்கள் மற்றும் ஒரு சரித்திரபடம் என மூன்று கன்னட படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போதைக்கு ராணாவிடம் இருந்து தப்பிக்க அவசர அவசரமாக த்ரிஷா படங்களை ஒப்புக்கொண்டுள்ளார். த்ரிஷாவின் இந்த அடங்காத ஆசையை கண்டு ராணா அதிர்ச்சியைடந்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply