இலங்கையில் வாழும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதிபர் ராஜபக்ஷே அரசை விரட்டியடிக்க வேண்டும் என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எம்.நிசார்மொஹமட் நஸ்மீ இன்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தன்னை ஐக்கிய தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். புத்தளம் நகரசபையின் முன்னாள் நகரசபைத் தலைவரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான இவர் கட்சியில் இணைவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ரணில், “ராஜபக்சே அரசின் கொடுமையான நடவடிக்கைகளினால் விவசாயிகள், இளைஞர்கள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களை சேர்ந்தவர்கள் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் ஆற்றல் எங்கள் கட்சிக்கு மட்டுமே உண்டு. ராஜபக்சே போன்ற மக்கள் விரோத சக்திகளை ஒன்று சேர்ந்து அவர்களை நாட்டை விட்டே விரட்டியடிப்போம். புதிய அரசின் கீழ் மக்களுக்கு நன்மைகளை வழங்க முடியும்” என்றார்
















