வீட்டுப்பாடம் செய்யாமல் 11வது மாடியில் ஜன்னலை திறந்து வெளியே குதித்த 12 வயது சிறுவன். சீனாவில் பெரும் பரபரப்பு.

teenage-boy-climbs-onto-11th-floorவீட்டுப்பாடங்களை எழுதாததால் தன்னுடைய தாயார் கொடுக்கும் தண்டனையில் இருந்த தப்ப சீனாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் 11வது மாடியில் உள்ள ஜன்னலை திறந்து வெளியே சென்று ஒளிந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவின் மீட்புப்படையினர் இரண்டு மணிநேரம் போராடி சிறுவனை மீட்டனர்.

சீனாவின் Yibing city, Sichuan province என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடம் ஒன்றில் இருக்கும் Xiao Kai என்ற சிறுவன், மூன்று நாட்களாக பள்ளியில் கொடுத்திருந்த வீட்டுப்பாடங்களை எழுதவில்லை. இதனால் தன்னுடைய தாயார் கோபப்பட்டு தன்னை தண்டிப்பார் என பயந்து 11வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து அதற்கு கீழெ உள்ள ஸ்லேப் ஒன்றில் ஒளிந்து கொண்டான்.

கீழே இருந்து இதை தற்செயலாக பார்த்த சிலர் உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் தெரிந்து வீட்டின் உள்ளே இருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பெற்றோர் தங்களது ஆபத்தான நிலையில் அழுதுகொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். பின்னர் மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு மணிநேரம் போராடி, சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிலமணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: , ,

Leave a Reply