எரிமலையின் உள்ளே 1200 அடி இறங்கி செல்பியாக புகைப்படம் எடுத்த கனடா சாகச நடிகர்.

george-kouronis-takes-selfie-inside-volcanoகனடாவில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான Angry Planet, என்ற தொடரில் நடிக்கும் George Kourounis, அவர்களை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவுக்கு அவர் புகழ் பெற்றவர். இதுவரை நடிப்பில் புகழ் பெற்று வந்த அவர், தற்போது சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளார்.

Vanuatu என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலையில் உள்ளே சென்று தன்னைத்தானே செல்பி போட்டோ எடுத்துள்ளார்.

தகுந்த பாதுகாப்பு கவசத்துடன் அமைந்து உடைகளுடன் கடந்த வாரம் வரை கொதித்துக்கொண்டிருந்த லாவா குழம்பு உள்ள எரிமலையின் உள்ளே இறங்கினார். இவர் இறங்கும் சமயத்தில் எரிமலை குழம்பு வெளியேறவில்லை எனினும் அதில் இருந்த வெப்பதால் இவருடைய செல்பி கேமராவும், இவர் அணிந்திருந்த உடைகளும் முற்றிலும் அழிந்துவிட்டது. ஆனாலும் அவர் எவ்வித ஆபத்துமின்றி வெளியே வந்தார்.

George Kourounis, சுமார் 1200 அடி வரை உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேமரா கருகினாலும், இவர் எடுத்த புகைப்படம் பாதுகாப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply