பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தமிழனைப் பிடித்த இந்தியா….!

Thameem-Ansariஇந்தியாவில் குண்டுத்தாக்குதல் நடத்தவதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுப் புதன்கிழமை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான அருண் செல்ராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இவரைக் கைது செய்யும் போது அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இருந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்ராஜன் தென்னிந்திய பாதுகாப்பு கட்டுமானங்களை பற்றி முக்கிய தகவல்களை சேகரித்தார் என்றும், அண்டை நாட்டின் உளவு அமைபுக்காக தரவு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறார் என்பதற்கான சான்றுகளையும் தாம் அவரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்ராஜன் இலங்கையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தேடப்படும் நபர் என்பதும் தமக்கு தெரியவந்துள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply