சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் இலங்கை விஜயம் தொடர்பிலான திகதிகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது இலங்கை விஜயத்திற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் சீன ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருப்பார் எனத் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பிற்கு அமைய சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்ற செய்தி நரேந்திர மோடியின் காதுகளுக்கும் தற்போது எட்டியிருக்கும். இதனை இந்திய அரசு சற்றும் எதிர்பார்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சீன அதிபர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார் என்பதும் முக்கியமான விடையமாக உள்ளது. சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 28 ஆண்டுகளில் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சீன ஜனாதிபதி ஜின்பிங், இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
















