ஐ படத்தின் ஆடியோ விழாவை விஜய் தவிர்ப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்

I-audio-launch-vijayஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படமான ‘ஐ’ படத்தின் ஆடியோ விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 15ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது. இந்த விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, கலந்து கொள்கிறார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மகேஷ்பாபு ஆகிய முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யும், ஷங்கரும் நண்பன் படத்தின் மூலம் மிகவும் நெருக்கமான நண்பர்களாகி உள்ளனர். விஜய்யின் பிறந்தநாளுக்கு ஷங்கர் அழைக்கப்பட்டார். அதுபோல ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது விஜய் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் தற்போது ‘ஐ’ ஆடியோ விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ‘ஐ’ படத்தின் உரிமையை ஆளுங்கட்சி தொலைக்காட்சி பெற்றுள்ளதால், அந்த தொலைக்காட்சி நிறுவனம் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்வதை விரும்பவில்லை என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஷங்கர் ஆகியோர்களும் இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து கொள்ள விரும்பவில்லை. விஜய்யும் ஐ’ படக்குழுவினர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply