“ஐஸ் பக்கெட்”, “ரைஸ் பக்கெட்” சவாலையடுத்துபச்சை மிளகாய் சவால்: மூன்று மிளகாய்களை உண்ட புத்திக பத்திரண..!

buddi-wi-chillieஅண்மைய நாட்களாக மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த ஐஸ் பக்கெட் சவால் மற்றும் ரைஸ் பக்கெட் சவாலையடுத்து தற்போது ‘பச்சை மிளகாய் சவால்’ ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியுதவியளிக்கும் நோக்கில், இந்த பச்சசை மிளகாய் சவால் இளைஞர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, மூன்று பச்சை மிளகாய்களை உண்டார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டால் பச்சைமிளகாயை உண்பது மட்டுமன்றி 100 ரூபாவையும் வழங்கவேண்டும். சவாலை ஏற்காவிட்டால் 1000 ரூபா செலுத்தவேண்டுமென்பது நியதி.

இதனடிப்படையில் புத்திக பத்திரண பச்சை மிளகாயையும் உண்டு குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமான தொகையை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இச் சவாலை ஏற்றுக்கொள்பவர், மேலும் ஐவருக்கு இச்சவாலை விடுக்கவேண்டும் என்ற நியதியின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அருண தீபால், ஊடகவியலாளர் சமன் பிரியன்கர மற்றும் நடிகர் காவிந்த பெரேரா ஆகியோருக்கு புத்திக பத்திரண இந்த பச்சை மிளகாய் சவாலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply