இலங்கையில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படும்: விக்னேஸ்வரன்

vikneswaran5இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் ஒருகாலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலையை ஏற்படுத்த முயற்ச்சிகள் நடைபெறுவதாக வடக்கு மாகான சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வடகிழக்கு மாகணத்தில் ராணுவம் 25 ஆண்டுகளுக்காவது இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்கின்றனர் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகணத்தில் சிங்களவர்கள் பெருவாரியாக குடியமர்த்த முயற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றம் சட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்று இப்போது கூறுவது போல் ஒருகாலத்தில் தமிழர்களும் இலங்கையில் இருந்தார்கள் என்று கூறும் நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவேண்டும் என்வும் இலங்கை வடக்கு மாகான சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தை அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்க்ஷே கூறி இருக்கும் நிலையில் வடக்கு மாகான சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply