யாழ்ப்பாணத்திற்கு முக்கியமாக வருகை தந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்காக அல்ல அமைச்சர் டக்ளஸிற்காகவே தான் வந்ததாக கிண்டலடித்தார்.
இன்று காலை இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை
சேனாதிராஜாவிற்கான வரவேற்பு யாழில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று உதயன் பத்திரிகை மீது டக்ளஸ் தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் டக்ளஸின் எதிர்த் தரப்பில் வாதாடுவதற்காக சட்டத்தரணியாக எம்.ஏ சுமந்திரன் வருகை தந்தார்.அத்துடன் இன்று தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜாவின் வரவேற்பு யாழில் இடம்பெற்றது.இந்த நிகழ்வை விட வழக்கு தொடர்பில் டக்ளஸிற்கு எதிராக வாதாடுவதற்கே தான் இங்கு முக்கியமாக வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
















