பிரித்தானியாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை !

uk_flagபிரித்தானியாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லுரா டேவிஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மட்டக்களப்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் சூழ்நிலை, குறிப்பாக கிழக்கின் அரசியல் நிலைமை குறித்து பேசப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கையை வலிறுயுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply