சர்வதேச கண்காணிப்பின் மத்தியில்தான் இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள், இலங்கை அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என கூறியுள்ளார். அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக கூறிய அவர், ஆனாலும் அதற்கு ஒரு காலவரையறையும் சர்வதேச கண்காணிப்பும் மிக அவசியம் என கூறியுள்ளார்.
13வது அரசியல் அமைப்பை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக அதிபர் கூறியது வரவேற்கத்தக்கது எனினும் மாகாண போலீஸ் அதிகாரம் என்பது, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மட்டுமே ஒழிய தாக்குலுக்கான அல்லது பாதுகாப்புக்கான அதிகாரத்துக்காக அல்ல என்பதில் தமது கட்சி உறுதியுடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார்
















