இலங்கை மீனவர்கள் மாலைதீவு கடலிலும் மீன்பிடிக்கலாம்..!

fishermanஇனிவரும் காலங்களில் இலங்கை மீனவர்கள் மாலைதீவு ஆழ்கடல் பகுதிகளிலும் மீன்பிடியில் ஈடுபடலாமென, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ‘கடல் வளங்களை தேவையற்ற விதத்தில் சுரண்டுவதோ வீணாக்குவதோ அன்றி உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலம் இரு நாட்டு மக்களும் தமக்கான ஆகக்கூடுதல் நன்மையினை பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற தொனிப்பொருளில் நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இதன்போது, கடல் வளங்களைக் கொண்டு ஏற்றுமதியில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, சுற்றுலாத்துறை, திறன் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, கல்வி செயற்பாடுகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply