பாகிஸ்தான் சிறுமி மலாலாவை சுட்டவர்கள் இரண்டு வருடங்களுக்கு பின் கைது. ராணுவம் அதிரடி

malalaபாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற 17வயது மலாலா என்ற பள்ளி மாணவியை தலிபான் தீவிரவாதிகள் கடந்த 2012ஆம் ஆண்டு கொடூரமாக தாக்கினர்.

அவர் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து திரும்பிவரும் போது அவர் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி தாக்குதலை நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த மலாலா லண்டன் மருத்துவமனையில் சிகிசை பெற்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

பின்னர் லண்டனில் இருந்து கொண்டே உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்தார். சமீபத்தில் நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 200 பேர் கடத்தபட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரை அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட சர்வதேச தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் மலாலா தாக்கப்பட்டு சரியாக இரண்டு வருடங்கள் கழித்து நேற்று மலாலாவை துப்பாக்கியால் சுட்டவர்களை அடையாளம் கண்டு ராணுவம் கைது செய்துள்ளது. இந்த தகவலை ராணுவ பத்திரிகை பிரிவு தலைவர் ஆசிம் பஜ்வா, இஸ்லாமாபாத்தில் நேற்று அறிவித்தார்.

Tags: , ,

Leave a Reply