அமெரிக்காவில் வினோதம்: 300 பொம்மைகளுடன் குடும்பமாக வாழும் பெண்

doll-womenவாஷிங்டன்: அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவில் வசிக்கும் பெண் மேரிலைன் மேன்ஸ்பீல்டு (36). இவர் 7 வயதாக இருக்கும் போது, அவரது தாய் ஒரு குழந்தை பொம்மையை வாங்கி கொடுத்தார். குழந்தை பொம்மை மிக அழகாக இருந்தது. அந்த பொம்மையை குழந்தையாக பாவித்து சீராட்டினார் மேரிலைன். பொம்மையை குளிப்பாட்டி, விதவிதமான விலை உயர்ந்த உடைகளை வாங்கி அணிவித்து அழகு பார்க்க ஆரம்பித்தார். அதன்பிறகு தத்ரூபமான குழந்தை பொம்மைகளை வாங்க தொடங்கினார். தன் கைபடவும் பொம்மைகள் செய்தார். தற்போது, மேரிலைன் மேன்ஸ் பீல்டுக்கு திருமணமாகி 40 வயதான ஜுத் என்ற கணவரும் 15 வயதில் ஒரு மகள், 10 வயதில் மகன் உள்ளனர்.

எனினும், 300 வகையான குழந்தை பொம்மைகளை மேரிலைன் வீடு முழுக்க நிரப்பி வைத்துள்ளார். தனது ஒரிஜினல் குழந்தைகளுக்கு செய்வது போல, குழந்தை பொம்மைகளுக்கு உடைகள் வாங்கி அணிவிக்கிறார். மேலும் குழந்தைகளுக்கு தேவையான என்னனென்ன பொருட்கள் உண்டோ, அத்தனையும் பொம்மைகளுக்காக வாங்கி வைத்துள்ளார். மேரிலைன் வீட்டுக்கு வருபவர்கள், தத்ரூபமான பொம்மைகளை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றனர். சில நேரங்களில் பொம்மைகளுடன் மேரிலைன் மற்றும் அவரது கணவர் வாக்கிங்கும் செல்கின்றனர்.

மேரிலைன் கூறுகையில் பொதுவாக பொம்மைகள் செய்ய ஆட்டின் முடியைத்தான் பயன்படுத்துவேன். ஆனால், எனது 15 வயது மகளின் தலை முடியை வைத்து உருவாக்கிய டேவினா ஸ்டார் குழந்தை பொம்மைதான் என்னுடைய பேவரைட். நானும் எனது கணவரும் இந்த குழந்தையை வீல்சேரில் வைத்தபடி வாக்கிங் செல்வோம். இதை பார்த்து பலர் கிண்டல் செய்கின்றனர். அதை பற்றி எனக்கு கவலையில்லை. பொதுவாக குழந்தைகள் பெரியவர்களாகும் போது பெற்றோருக்குள் ஒரு வித ஏக்கம் தோன்றும். அந்த ஏக்கத்தை இந்த குழந்தைகள் (பொம்மைகள்) தீர்த்து விடுவார்கள் என உருகுகிறார்.

Tags: , , ,

Leave a Reply