இலங்கையில் தமிழர்கள் இருந்தார்கள் என்று கூறும் நிலை வரப்போகிறது.. வடக்கு மாகாண முதல்வர் எச்சரிக்கை

vikineswaran5இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் ஒருகாலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்று கூறும் நிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாகாணத்தில் ராணுவம் 25 ஆண்டுகளுக்காவது இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மகாணத்தில் சிங்களவர்களை பெருவாரியாக குடியமர்த்த முயற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்று இப்போது கூறுவது போல் ஒருகாலத்தில் தமிழர்களும் இலங்கையில் இருந்தார்கள் என்று கூறும் நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு விஸ்னேஸ்வரன் கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply