விக்கி இலங்கை தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாட்டில் ஆற்றிய உரையை அவதானித்தீர்களா?
அதில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்சித்திருப்பதுடன், தலைவரையும், புலிகள் அமைப்பினரையும், ஆதரிப்பவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
இதெல்லாம் மேடைப்பேச்சில் ஏதேச்சையாக நிகழ்ந்தவை அல்ல. தன் மனதில் உள்ளதை நன்கு திட்டமிட்டு எழுதிக்கொண்டு வந்து வாசித்து அவர் மறுபடியும் மறுபடியும் எங்களை சீண்டுகிறார்.
”எங்கள் இதயத்தை கிழித்து அது தசைகளாலும், நரம்புகளாலும், இரத்தத்தாலும் ஆனதா?” என்று பரீட்சிக்கும் விசமத்தனத்துக்கு ஒப்பானதாகும் இந்தச்செயல்!
எழுதிக்கொண்டு வந்து வாசிப்பதிலேயே இப்படி என்றால், எழுந்தாமானமாக கதைப்பதென்றால் இன்னும் என்னென்ன சொல்லுவார்.
மாகாணசபையை உம்மிடம் தந்து ஒரு வருசத்துக்குள்ளேயே இவ்வளவு குளறுபடி, தளம்பல், குத்துவெட்டு, முட்டி மோதல், முறுகல், புலம்பல், இழுபறிகள், இயலாமை, ஆற்றாமை என்றால்,
சுமார் முப்பத்தாறு வருசங்கள் ஒரு விடுதலைப்போரை நடத்திய பெருந்தலைவனுக்கு எவ்வளவு சவால்கள், போராட்டங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், சதிகள், துரோகங்கள், வலிகள், இருந்திருக்கும். யாரை யார் விமர்சிப்பது?
இந்த ஒரு வருசமே மாகாணசபையை கொண்டிழுக்க முடியாமல் நாக்க தொங்கப்போட்டுக்கொண்டு, தண்ணி தேடி அலையும் நீங்கள் தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காக எதை செய்து விட்டீர்கள்? பெரிதாக எதைச்சாதித்து விட்டீர்கள்? பட்டியல் போட்டுக்காட்ட முடியுமா? தெம்பிருக்கா?
மகிந்த அரசை எதிர்த்து இன்று வரை ஒரு வழக்கைத்தானும் போட திராணியற்ற தாங்களா, எமது மக்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப போகின்றீர்கள்? நகைப்புக்கிடமாக இருக்கிறது.
சட்டத்த அப்பிடியே கையில எடுத்து வானத்த வளைப்பீர்கள் எண்டு கூறித்தானே சம்பந்தனும், சுமந்திரனும் உங்களை வடக்குக்கு இறக்குமதி செய்தார்கள். தங்களால் அது முடிந்ததா?
மாவைக்கு ஆங்கில அறிவுப்புலமை இல்லை எண்டு கூறித்தானே தங்களை அலங்கரித்தார்கள். உந்த ஆங்கிலத்தை வைச்சு எதையாவது செய்ய முடிந்ததா? செயல் தான் எந்திரமாக இருக்க வேண்டுமே தவிர, சொல் அல்ல.
நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாலு வருச முடிவில தாங்கள் எத்தினை ஊர்கள விடிவிய்ச்சு தந்திருக்கிறீயள்? எத்தினை பேர மீளக்குடியேத்தியிருக்கிறீயள்? கணக்கு பார்க்கப்படும்.
அப்போதாவது உமக்கு புரியட்டும் எம் தலைவரின் ஆளுமை, பலம்!
வாதங்கள் தொடரும்…
ஈழம் முல்லைத்தீவிலிருந்து,
-முன்னாள் போராளி-

















