பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம்- அச்சத்தில் இலங்கை

un_geneva_flagsபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் கமரூன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மனித உரிமை பிரச்சினைகளை காரணம் காட்டி கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கடந்த வருடம் புறக்கணித்திருந்தார்.

அதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய ஆதரவு வழங்கும் என அறிவித்திருந்தார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இரண்டு கூட்டங்கள் அந்த அமைப்பின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுநலவாய அமைப்பின் மறுசீரமைப்பு மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

Tags: , ,

Leave a Reply