தென்னாசியாவின் சூதாட்டமையமாக கொழும்பு மாறிவருவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் விடுதிகளில் சூதாடுவதற்க்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து பண வசதியுள்ளவர்கள் சூதாட்டத்திற்காக இலங்கை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கான முதலமைச்சர் விடுதிகளில் சூதாட்டம் இடம்பெறுவதற்க்கு அனுமதிக்கவேண்டாம் இதற்க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிஸாரிற்க்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து சூதாட்டம் இடம்பெற்ற விடுதிகள் பல மூடப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இதில் ஆர்வம் உள்ளவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்அதேவேளை பணவசதி படைத்தவர்கள் இலங்கை செல்கின்றனர், உல்லாசப்பயணம், பொலிஸ்தொந்தரவுகள் இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் சூதாட்ட பிரியர்களுக்கு இலங்கை மிகவும் விருப்பமான நாடாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















