குடியிருப்பில் ரகசிய விபச்சாரம்: பொலிசை பார்த்து பறந்தோடிய இளம் ஜோடிகள்!

police_raid_004மத்தியப் பிரதேச மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலின் அசோக் கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள வர்த்தமான் கிரீன் பார்க் குடியிருப்பு வீடு ஒன்றில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து போயுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட வீட்டினுள் பொலிசார் நுழைந்தபோது, அங்கிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

எனினும் அவர்களை விடாமல் துறத்தி சென்ற பொலிசார் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த வீட்டில் கும்மாளம் போட்டவர்கள் அனைவரும் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply