சின்ன குஷ்புவின் இயக்குனர்களை ஸ்பெஷல் பார்ட்டி வைத்து இழுக்கும் மேக நடிகை.

kisu-kisuசின்ன குஷ்பு என்ற அழைக்கப்படும் நடிகையும் சமீபத்தில் வெளியான மேகமான பெயரைக்கொண்ட திரைப்படத்தின் நாயகியாக நடித்த உலக நாயகனின் மகள் பெயரை கொண்டவரும் கண்டும் காணாதது போல இருக்கின்றார்களாம். மும்பையில் இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கும்போது நெருங்கிய தோழிகளாக இருந்தவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் முறைத்து கொள்வதற்கு என்ன காரணம் என தெரியாமல் கோலிவுட் குழப்பம் அடைந்துள்ளது.

சமீபத்தில் மேக நடிகை அளித்த ஒரு பேட்டியில் சின்னகுஷ்புவை விட அதிக படங்களில் நடித்து பிரபலமாவேன் என கூறியதால்தான் இந்த முறைப்பு என கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் சின்னக்குஷ்பு அறிமுக நடிகைக்கு பயப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாக். சின்னக்குஷ்பு ஒப்பந்தமாகும் படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வீட்டிற்கு வரவழைத்து ஸ்பெஷல் விருந்து கொடுக்கின்றாராம் மேக நடிகை. இதுதான் சின்னக்குஷ்புவின் பயத்துக்கு காரணம் என கூறப்படுகிறது

Tags: , ,

Leave a Reply