தமிழக மீனவர் பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாடு!!

jaya4தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

தூத்துக்குடி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 282 கோடி ரூபாய் செலவில், நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் விலைவாசி உயர்ந்த போதிலும், ஏழை மக்களுக்காக தமிழகத்தில் மருந்து, உணவு, குடிநீர், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

கடந்த திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மின்வெட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினைகளில், தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருதாகவும் ஜெயலலிதா தனது பரப்புரையில் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply