10 இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருகின்றனர் !!

ukபத்து இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் இந்த தகவல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் எனா சொப்ரீயினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இவர்கள் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து பிரித்தானியாவில் குடியேறியவர்களா ? இல்லை பிரித்தானியாவில் பிறந்த இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பான தவல்கள் எதுவும் வெளிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Tags: , ,

Leave a Reply