சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்ற அகதிகள் கப்பல் மூழ்கி 250 பேர் பலி. லிபியாவில் பரபரப்பு

dath-as-boaஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 250 பேர் கடல்வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற கப்பல் திடீரென மூழ்கி அதில் பயணம் செய்த அகதிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அந்த கப்பலில் சென்றவர்கள் பெரும்பாலானோர் இறந்து தண்ணீரில் மிதப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக செல்லும் அகதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லிபியா தலைநகர் திரிபோலியின் அருகேயுள்ள தஜீரா என்ற பகுதியில் நடுக்கடலில் 250 அகதிகளுடன் சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கியது. தகவல் அறிந்ததும் லிபியா மற்றும் சிரியா கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுடைய தீவிர முயற்சியால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களின் கதி என்ன என்ன ஆனது என்று தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறதுல்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடியேறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டிற்கு சுமார் 100,000 பேர் அகதிகளாக வந்துள்ளதாக கூறப்படுகிறது கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போன்ற ஒரு படகு மூழ்கியதில் சுமார் 100 அகதிகள் கடலில் மூழ்கி மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply