தமிழ் மக்களிற்கு சொந்தமான பூர்வீக நிலங்களான முல்லைத்தீவு கொக்கிளாயில் சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை எனும் பௌத்த விகாரையினை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் படையினர் பாதுகாப்பு வழங்க அமைக்கப்பட்டு வரும் விகாரையில் முதற்கட்டமாக நேற்று மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்கனவே புத்தர் சிலை ஒன்று அண்மையினில் நிறுவப்பட்டிருந்தது.
தற்போது அதற்கருகாமையில் மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டு, சிறீ சம்போதி மகா விகாரை என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக கொக்கிளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பகுதி அபகரிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே அமைக்கப்பட்ட விகாரைக்கு தனியார் காணி அபகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















