அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து தங்களது இயக்கத்தி நிலைகளை குறிவைத்து வான்வழித்தாக்குதல் நடத்துவதை கண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம் பிணைக்கைதிகளை பிடித்து சென்று அவர்களின் தலைகளை கொய்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் உள்ள பெண்களும் இத்தகையை செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று பிரிட்டனின் இருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சேர்ந்துள்ள பெண் ஒருவர் தனது டுவிட்டரில் வெட்டிய மனிதத்தலையை கையில் பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனால் பிரிட்டன் உள்பட அனைத்து உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பிரிட்டன் மெடிக்கல் கல்லூரி மாணவி என தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் அந்த பெண் ஜிகாதியின் பெயர் உசாமா என்று கூறப்படுகிறது. உசாமா சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா என்ற நகரில் டாக்டராக பணிபுரிந்து வருவதாகவும், அவர் கையில் தலையுடன் டாக்டருக்குரிய உடையுடன் அந்த புகைப்படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்புநிற துணீயை முகத்தில்அணிந்து தலையில் வெட்டிய தலையுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை சிறிது நேரத்தில் டுவிட்டர் தனது இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.
இந்த புகைப்படத்தில் உசாமாவுடன் இரண்டு சிறுவர்களும் இருக்கின்றனர். அவருடைய டூவிட்டர் இணையதளத்தை 800 பேர் ஃபாலோ செய்வதாகவும், அதில் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட புகைப்படம், இறந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் ஆகியற்றவை பதிவு செய்துள்ளார்.
















