இலங்கையில் இரு உலகங்கள் காணப்படுகின்றன, ஒன்று ஜனாதபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அனுபவிக்கும் ஆடம்பர உலகம், மற்றையது சாதாரண மக்கள் வாழும், துயரத்தை அனுபவிக்கும் உலகம்.என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஊவா தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தை விட மக்கள் தற்போது அதிகளவு துயரத்தை அனுபவிக்கின்றனர்.
ஜனாதிபதியும், அவரது குடும்பத்தினரும், அவர்களுடைய நெருங்கிய சகாக்களும், நாளாந்தம் ஐந்து நட்சத்திர விடுதி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர், அதேவேளை ஏயை மக்கள் துன்புறுகின்றனர்.
ஜனாதிபதியின் சகாக்கள் ஒரு அப்பத்திற்க்கு 200 ரூபாய் செலவிடுகின்றனர். ஆடம்பர உடையை அணிகின்றனர்.
யுத்தத்திற்க்கு பின்னர் மக்கள் வடக்கிற்க்கும், தெற்க்கிற்க்கும் இடையில் பயணம் செய்ய முடிவது உண்மைதான்,ஆனால் இலங்கையில் இரண்டு உலகங்கள் உள்ளன. ஒன்று ஜனாதபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அனுபவிக்கும் ஆடம்பர உலகம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















