கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சுவீடன் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டின் பிரதமர் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சுவீடன் நாட்டின் பிரதமர் Fredrik Reinfeldt அவர்களுடைய ஆளுங்கட்சிக்கு 39.4 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி 43.7 சதவிகித வாக்குகள் பெற்று அமோக் வெற்றி அடைந்துள்ளது. 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தனது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை Fredrik Reinfeldt ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் தனது கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் Fredrik Reinfeldt ராஜினாமா செய்துள்ளார். சுவீடன் மக்கள் மாற்றம் வேண்டும் என முடிவு செய்துள்ளதால் எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளதாகவும் மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரான Stefan Lofven அவர்கள் அடுத்த ஆட்சி அமைப்பதற்குண்டான ஏற்பாடுகளை செய்து வருவதாக சுவீடனில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
















