மூன்றே மாதங்களில் முடிவுக்கு வந்தது மோடி அலை. 10 மாநில இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு.

narendra-modiஉ.பி, குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்காளம் உள்பட 10 மாநிலங்களில் 33 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 பாராளுமன்ற தொகுதிகள் ஆகியவற்றுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை தொடங்கபட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ஜனதா கட்சியும், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள்

உத்தரபிரதேசம். தேர்தல் நடந்த தொகுதிகள் 11

சமாஜ்வாடி ஜனதா கட்சி 8
பாரதிய ஜனதா 3

மைன்புரி பாராளுமன்ற தொகுதி. சமாஜ்வாடி வெற்றி.

குஜராத்: தேர்தல் நடந்த தொகுதிகள் 9

பாரதிய ஜனதா 6
காங்கிரஸ் 3

வதேரா பாராளுமன்ற தொகுதி. பாஜக வெற்றி

ராஜஸ்தான் தேர்தல் நடந்த தொகுதிகள் 4

காங்கிரஸ் 3
பாஜக 1

தெலுங்கானா
மெதக் பாராளுமன்றா தொகுதி. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி

மேற்குவங்காளம் தேர்தல் நடந்த தொகுதிகள் 2

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1
பாரதிய ஜனதா 1

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் அபார வெற்றி பெற்ற நிலையில், மோடி அலையே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தோல்வி அக்கட்சிக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. அதே சமயம் பா.ஜனதாவினர் கூறிவந்த மோடி அலை தற்போது எங்கே போய்விட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாநில தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags: , ,

Leave a Reply