தாய்லாந்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட்ட 9 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் இடமொன்றில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
















