அஜீத் படத்தில் இருந்து அனுஷ்கா-த்ரிஷா வெளியேறியது உண்மையா? திடுக்கிடும் தகவல்

ajith-55-movie-anushka-trishaகவுதம் மேனன் தற்போது அஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் அஜீத் 55 திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. தற்போது ராஜஸ்தானில் கடைசி கட்ட படப்பிடிப்பில் உள்ள படக்குழுவினர் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து ஒரு செய்தி ஒருசில இணையதளங்களில் பரவி வருகிறது. அஜீத் 55 படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் உடனே இயக்கபோவதாகவும், அந்த படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து சமூக வலைத்தளத்தையும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் அஜீத் 55 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் அது உடனே நடக்கக்கூடியதில்லை என்றும், இந்த படத்திற்கு பின்னர் கவுதம் மேனன் சிம்பு படத்தை முடித்த பின்னர் அதன்பின்னர்தான் அஜீத் 55 இரண்டாம் பாகம் குறித்து அவர் முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க மறுத்ததாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என்றும், இதுகுறித்து அவர்களிடம் கவுதம் மேனன் ஆலோசிக்கவே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஜீத் இந்த படத்தை முடித்துவிட்டு ஷாலினியின் பிரசவம் வரை ஓய்வு எடுக்க போவதாகவும் எனவே அவர் அடுத்து எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதுபோன்ற வதந்திகளை அஜீத் ரசிகர்கள் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply