ஜனா­தி­பதி தனது சிம்­மா­ச­னத்தை விட்டு கீழ் இறங்க வேண்­டிய காலம் வந்து விட்­டது

tilvin-silva-jvpஜனா­தி­பதி தனது சிம்­மா­ச­னத்தை விட்டு கீழ் இறங்க வேண்­டிய காலம் வந்து விட்­டது. ஜனா­தி­பதி தேர்­தலை நடத்த முன்­னரே தனது தோல்­வி­யினை உணர்த்தும் தேர்­த­லாக ஊவா தேர்தல் அமையும் என எச்­ச­ரிக்கும் ஜே.வி.பி., இரா­ணுவ மயப்­படுத்­தப்­பட்ட தேர்­தலில் மக்­களின் பலத்­தினை காட்ட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தது

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் பத்­தர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஊவா மாகா­ணத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லை­யினை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அர­சாங்க அடி­யாட்­களின் அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களும் அர­சாங்க உட­மை­களை பயன்­ப­டுத்­து­வதும் மிகவும் அதி­க­ரித்­துள்­ளது. இலங்­கையின் வர­லாற்றில் மாகாண சபைத் தேர்­த­லுக்­காக அரச உட­மை­களை அதி­க­மாக பயன்­ப­டுத்­திய தேர்தல் இதுவே. இதற்குக் காரணம் அர­சாங்­கத்தின் தோல்வி இப்­போதே அவர்­க­ளுக்கு தெரிந்து விட்­ட­மையே. ஊவாவில் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக லஞ்சம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. மறு­புறம் பாது­காப்பு பிரி­வி­னரை பயன்­படுத்தி அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­ன­வர்­களை அச்­சு­றுத்­து­கின்­றனர். எதிர்க்­கட்­சி­களின் காரி­யா­ல­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. ஊவாவில் அர­சாங்கம் வெற்­றி­யினை தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக எதை செய்­தாலும் அவர்­களால் வெற்றி பெற முடி­யாது.

மேலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது சிம்­மா­ச­னத்தை விட்டு கீழி­றங்க வேண்­டிய காலம் வந்து விட்­டது. மக்கள் இன்று இந்த அர­சாங்­கத்தின் மீதுள்ள நம்­பிக்­கை­யினை இழந்து விட்­டனர். மக்­களின் பலமும் ஆத­ரவும் அர­சாங்­கத்­திற்கு இருக்­கு­மாயின் அர­சாங்க தரப்­பினர் அடா­வ­டித்­த­னத்­தினை கையாள வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டாது.

எனினும் இன்று நிலைமை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. எதிர்க்­கட்­சி­களை விடவும் ஆளும் தரப்­பி­னரே அதிக குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். அது மட்­டு­மன்றி இன்று ஊவாவில் இரா­ணுவ படை­களின் நட­மாட்­டமும் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த வாரத்தில் ஊவா தேர்­த­லுக்­கா­கவே நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணுவ மற்றும் அதி­ர­டிப்­படை வீரர்­களை அர­சாங்கம் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. இது தொடர்பில் தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் முறைப்­பா­டுகள் செய்­துள்ளோம். அதேபோல் தேர்தல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் ஆதாரங்­க­ளுடன் முறைப்­பா­டு­களை செய்­துள்ளோம். எனினும் இது தொடர்பில் நியா­ய­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வதில் சந்­தேகம் உள்­ளது.

எது எவ்­வாறு இருப்­பினும் அர­சாங்கம் எதைச் செய்தாலும் மக்கள் தைரியமாகவும் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முன்னரே அரசாங்கம் தனது தோல்வியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேர்தலாக இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply