239 பேருடன் மாயமான மலேசியா விமானத்தை… 6 வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பிரத்தானியர்…!

2014 ஆம் அண்டு 239 பேருடன் காணாமல் போன மலேசியா விமானம் MH370க்கான ஆபத்தான தேடலைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரித்தானியர், ஒரு நாள் மீண்டும் விமானத்தைத் தேடி கண்டுபிடிப்பேன் என்று சபதம் செய்துள்ளார்.2014 மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் 12 விமானக்குழுவினருடன் பயணித்த மலேசியா விமானம் MH370 மாயமானது. பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 6 வருடங்கள் ஆகியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

கூகிள் மேப்பி ல் மலேசியா விமானத்தை கண்டுபிடித்ததாகக் கூறி இயன் வில்சன் என்ற பிரித்தானியர், விமானத்தை கண்டுபிடிக்க கடந்த ஆண்டு சகோதரர் ஜாக் உடன் கம்போடியாவுக்கு சென்றுள்ளார்.கம்போடியாவின் வனப்பகுதியான Phnom Aoral சிகரத்திற்கு நான்கு மைல் வடக்கே கடுமையான நிலைமைகளில் போராடிய பின்னர் தேடலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயன் வில்சன் கூறியதாவது, நான் கூகிள் மேப் மூலம் கம்போடியாவின் வனப்பகுதியில் விமானம் இருப்பதை கண்டறிந்தேன்.கடந்ந முறை தேடுதலின் போது சகோதரர் மலையில் மரியிழையில் உயிர் தப்பினர். இது மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்தது, வழிகாட்டிகள் அனுபவிமிக்கவர்களாக இருந்ததால் நாங்கள் தப்பினோம்.எனக்கும் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதனால், தேடுதல் பணியை கைவிட்டோம். சில மாதங்களுக்குப் பிறகு, நான் மீண்டும் செல்ல தயாராக இருக்கிறேன், நிச்சயமாக மீண்டும் சென்று விமானத்தை கண்டுபிடிப்பேன் என இயன் வில்சன் சபதம் செய்துள்ளார்.செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்த பின்னர், அவுஸ்திரேலியாவின் மேற்கே இந்தியப் பெருங்கடலில் விமானம் மயமானதாக புலனாய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால், கம்போடியாவில் விமானம் கண்டுபிடித்ததாக இயன் வில்சன் கூறுவதில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!