யாழில் காதலியை அழைத்தார் காதலன்! ஆப்பு வைத்தார் தந்தை !

loversயாழ் பருத்தித்துறையைச் சோ்ந்த காதலன் ஒருவா் தனது காதலியை திருகோணமலை உவா் மலையில் இருந்து கடத்திச் செல்வதாக காதலியின் தந்தை கொடுத்த முறைப்பாட்டின் பேரில் 4 போ் பொலிசாரல் கைது செய்யப்பட்டனா். காதலியின் விருப்பத்துடன் காதலன் வாகனத்தை விட்டு காதலியை அழைத்து வருவதற்கு முயன்றுள்ளாா்.

இந்த விடயம் காதலியின் தந்தைக்கு தெரியாமல் நடந்துள்ளது. காதலி வாகனத்தில் ஏறி யாழ்ப்பாணத்திற்கு செல்வதை அறிந்த தந்தை திருகோணமலைப் பொலிசாருக்கு அறிவித்து வாகனத்தை பதவியாப் பகுதியில் வைத்து பொலிசாரைக் கொண்டு மடக்கியுள்ளாா். தற்போது அதில் இருந்த காதலித்த பெண்ணை மீட்டதுடன் கடத்திச் சென்ற நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags: , ,

Leave a Reply