Leela, மற்றும் Mastizaade ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது One Night Stand என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்லார். இந்த திரைப்படத்தை புளூ, பாஸ் போன்ற திரைப்படங்களை இயக்கிய அந்தோனி டிசோஸா அவர்களின் மனைவி ஜாஸ்மின் இயக்குகிறார். இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக இந்த படத்தில் சன்னிலியோன் கவர்ச்சியின்றி குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்கிறார். ஒரு நாள் இரவில் காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்தும் என்கவுண்டர் சன்னிலியோன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடுகிறது. அதில் இருந்து சன்னிலியோன் எப்படி மீள்கிறார் என்பதே கதை.
இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ராணா டகுபதி நடிக்கவுள்ளார். முதலில் இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் ஒப்பந்தம் ஆகும் கடைசி நேரத்தில் அவர் படத்தில் இருந்து தூக்கியடிக்கபட்டு சன்னிலியோன் ஒப்பந்தமானார். இதனால் த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளார்.
Black, Guzaarish போன்ற ஹிட் படங்களுக்கு கதை வசனம் எழுதிய பவானி ஐயர் இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார். வரும் நவம்பர் முதல் தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும், 2015 இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
















