ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் கிடைக்குமா? இன்று பொது வாக்கெடுப்பு.

britain-scotland-seperate-voteபிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடக்கவுள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து மக்கள் ஆழ்ந்து யோசித்து வாக்கு அளிக்க வேண்டும் என்றும் ஒருவேளை பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாகுமானால், அது மிகவும் வேதனையளிக்க கூடியதாக அமையும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று கூறியுள்ளார்.

நேற்று ஸ்காட்லாந்து பயணம்மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு பொதுமக்களிடையே பேசியபோது, பிரிட்டனின் ஒரு பகுதியாகவெ ஸ்காட்லாந்து தொடந்து செயல்பட வேண்டும் என பிரிட்டன் மக்களின் ஒவ்வொரு இதயமும் கூறுகிறது. ஆனால் தனி நாடாக வேண்டும் என்ற முடிவை ஸ்காட்லாந்து மக்கள் விருப்பப்பட்டால், அது ஒரு தற்காலியபிரிவாக இருக்காது என்றும் இந்த பிரிவினை இரு தரப்பினர்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கும் என கூறினார். சுதந்திர நாடு என்ற கரைந்து போய்விடக் கூடிய கனவை ஸ்காட்லாந்து மக்கள் ஏற்கக் கூடாது என விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனிநாடாக இயங்கி வந்த ஸ்காட்லாந்து 1603ஆம் ஆண்டு முதல் பிரிட்டனின் கீழ் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் சட்டம், கல்வி, மத அமைப்பு நிர்வாகம் ஆகிய துறைகளில் கடந்த முன்னூறு ஆண்டுகளாக சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஸ்காட்லாந்தில் 1997ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனியாக தேர்தல் நடந்தது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தீவிர முயற்சியால் ஸ்காட்லாந்து தனியாக பிரிவதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்து அரச குடும்பம் நடுநிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply