இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவில் உள்ளதாக ஜனாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊவா மகாணசபைத் தேர்தலில் எனக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் வித்ததில் அமைந்தால் ஐ.தே.க, ஜே.வி.பி ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முடிவை எடுப்பேன் என தெரிவித்தார்.
நாங்கள் வேறுவேறு கொள்கைகள் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடலாம். எனினும் எமது பொதுவான இலக்கு என்பது ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பண்டாரவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்குள்ளான பொன்சோகவின் கார் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதியின் மாதிரித் தோற்றமும் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
















