உலக பில்லியனர்களின் பட்டியல் வெளியீடு. 571 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடம்.

wealth-x-ubs-billionaire-census2014-ஆம் ஆண்டிற்கான பில்லியன்கள் பட்டியல் ஒன்றை Wealth-X மற்றும் UBS Billionaire Census 2014, ஆகிய நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா பில்லியனர்கள் பட்டியலில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் பட்டியலில் 6-வது இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 103 பில்லியனர்களை கொண்ட இந்தியா, இந்த ஆண்டு 100 பில்லியனர்களை மட்டுமே கொண்டுள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. ஆனாலும் இந்த 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பின் கூட்டுத்தொகை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ள பில்லியனர்களை விட அதிகளவில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் மொத்தம் 2325 பில்லியனர்கள் உள்ளனர். இதில் 155 பேர் புதிதாக பில்லியனர்களாக மாறியுள்ளனர். மீதியுள்ளவர்கள் ஏற்கனவே பில்லியனர்களாக இருந்தவர்கள்.

உலக அளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா 571 பில்லியனர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. சீனா 190 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் 130 பில்லியனர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளது. உலக கோடீஸ்வரர்களின்
எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக யூபிஎஸ் சென்சசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply