ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்டிசிக் கூட்டத்தில் வாயு பலூன்கள் வெடிப்பு 10 பேர் காயம்!

election-meeting-gas-balloon-explodedஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்டிசிக் கூட்டத்தில் வாயு பலூன்கள் வெடித்தத்தனால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டது. இதில் ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளனர்.

வெல்லவாய பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலேயே பலூன்கள் வெடித்துள்ளன.

பலூன்கள் வெடித்துச் சிதறியதில் பத்து பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் இதில் என்ன வாயு நிரப்பப் பட்டிருந்தது மற்றும் இது சதிவேலையா என்ற காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

Tags: , ,

Leave a Reply