இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத்தத்தில் ஈடுபடும் நாகை மீனவர்கள்.

fisher manஇலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து தமிழக நாகை மாவட்ட பூம்புகார் மீனவர்கள் இன்று காலவரையற்ற உண்ணா வைரத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பூம்புகார் புதுகுப்பம், வானகிரி பகுதியை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 10ம் திகதி கோடியக்கரை அருகே ஒரு விசைப்படகு மற்றும் 3 பைபர் படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகு மற்றும் பைபர் படகில் இருந்து மீன்பிடித்த 21 மீனவர்களை பிடித்து கைது செய்து விசைப்படகில் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

2 மீனவர்கள் மட்டும் கடலில் குதித்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பூம்புகார் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.

100 விசைப்படகு, 500 பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களுக்கு தினமும் பல லட்சம் வருமான இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பூம்புகார் உள்பட 64 மீனவ கிராம மக்கள் இன்று முதல் குடும்பத்தினருடன் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். இலங்கை அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து படகுகளை திருப்பி வழங்க கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply