அமைதியாக முடிந்தது ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு. இன்று முடிவு தெரியும்

britain-scotland-seperate-voteபிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து பிரிந்து சுதந்திர நாடாகச் செயல்படுவதற்காக நேற்று பொதுமக்களிடையே பொது வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 16 வயது நிரம்பியவர்களும் முதன்முதலாக வாக்களித்தனர். மொத்தம் சுமார் 4.1 மில்லியன் பேர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ச்சியாக நடந்து இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. தற்போது இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவு இந்திய நேரப்படி பகல் 12மணிக்குள் முழுமையாக தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

பொது வாக்கெடுப்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு சீட்டில் “ஸ்காட்லாந்து சுதந்திர நாடாக வேண்டுமா?’ என்ற கேள்வியுடன் ஆம், இல்லை என இரு கட்டங்கள் தரப்பட்டுள்ளது. அதில் தங்களுக்கு பிடித்த முடிவை வாக்குச் சீட்டில் பேனாவால் குறியிட்டு வாக்களிக்க வேண்டும்.

இந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்து அரச குடும்பம் நடுநிலை வகிக்கின்றது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் பிரதமர் ஸ்காட்லாந்து மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என நேற்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply