கடந்த ஜுலை மாதம் நெதர்லாந்து நாட்டில் இருந்து மலேசியாவுக்கு சென்று கொண்டிருந்த MH17 என்ற விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இந்த விபத்தில் விமானத்தில் பலியான 283 பயணிகளும் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் விசாரணை செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய நபர் அல்லது நபர்களை பிடிக்கும் நடவடிக்கையில் இந்த நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் துப்பறியும் நிறுவனம் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. MH 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் குறித்து ஆதாரபூர்வமான தகவல் தெரிவிக்கும் நபருக்கு $30மில்லியன் பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த தொகை ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க அரசு அறிவித்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு ஒசாமாவுக்காக $25மில்லியன் தொகை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக உக்ரைன் தீவிரவாதிகளின் படைகளில் உள்ள ஒருவரே விமானத்தை சுட்டு வீழ்த்தியவரை காட்டிக்கொடுக்க முன்வரலாம் என்பதே ஜெர்மனி துப்பறியும் நிறுவனத்தின் ஊகம். அவர்களது ஊகம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















