போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன : மாவை சேனாதிராசா

Mavai-Senathirajah3இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன.போருக்கு செல்வதற்க்கான ஒரு தூண்டுதலாகவே அது அமைக்கின்ஙறது.போருக்கு செல்வதற்க்கான அடை அணிகளாகவே

நான் அதனைப் பார்க்கின்றேன். என மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி காங்கேசன்துறை தமிழரசுக்கட்சியினால் வழங்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராசா

நாங்கள் தோற்றுப் போனவர்கள்அல்ல.இதனால் தாம் நாம் இன்று அகிம்சை வழியிலான போராட்டத்தை தேர்ந்து எடுத்துள்ளோம் அகிம்சைப் போராட்டம் என்றும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை.

நான் தலைவனாக இருக்கவில்லை ஆனால் தலைமைப் பொறுப்பையே ஏற்றுள்ளேன். என்ளையாரும் தலைவர் என்று கூறத் தேவையில்லை அண்ணன் என்ற சொற்பாம் மிகவும் சிறந்ததாக இருக்கின்றது.நான் சிறையில் இருந்த காலத்திலும் கூட என்னிலும் வயதில் குறைந்தவர்களும் கூட என்னை அண்ணன் என்றே அழைப்பார்கள்.

நான் மறியலில் இருந்த காலத்தில் எனக்கு காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர் கனகசபாபதி நேரு இந்திராகாந்திக்கு எழுதிய நூலை எனக்க அன்பளிப்பு செய்திருந்தார்.நான்’ அதனை இன்றும் என்னிடம் வைத்தள்ளேன.;

அதனையே எனது வரலாற்று பட்டப்படிப்பிற்க்கும் ஒரு பாடமாக எடுத்து அதில் பட்டமும் பெற்றுள்ளேன். நான் எல்லாவற்றையும் சுமப்பேன் என்ற கூறவில்லை நீங்களும் என்னுடன் இனைந்து சுமக்க வேண்டும்.

நாங்கள் யாரும் தூங்கிவிடக் கூடாது.எமது இலக்கைநோக்கி நகர வேண்டியது அத்தியாவசியமாகும்.சென்ற சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாட்டின் தூதுவர் வந்து என்னுடன் தனியாக பேசினார்.உள்நாட்டுப் பிரச்சனையில் தாங்கள் தலையிடுவதை அரசு விரும்பவில்லையென்று.

ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள் பலர் சிறை சென்றதும் அகிம்சை வழியில் தம்மை வருத்தி அங்கு மாண்டுள்ளார்கள்.சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

அந்த வேளையில்காந்தி குறிப்பிட்டார் காங்கிரஸ் கொள்கைக்கு ஆபத்து வந்துள்ளது என்ற கூறி வேறு ஒருவரை போட்டிக்கு நியமித்தார் ஆனால் அதில் வெற்றி பெற்றது சுபாஸ் சந்திபோசே ஆகும்.

துன்பத்தை எந்தளவுக்கு ஒருவன் தாங்கிக் கொள்கின்றனோ அவனே அந்த நிகழ்வில் வெற்றி பெறுகின்றான்.கடந்த காலத்தில் எமது புலிகள்தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஸபக்ஸ எமது பகுதியில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை.

இதனை நீங்கள் சரியான முறையில் ராஸபக்ஸ அரசுக்கு விளக்கியுள்ளீர்கள். காட்டியுள்ளீர்கள். நாங்கள் பாண்டவர்கள் போல் வெற்றி பெற முடியும்.அறம் பிழைப்போருக்கு அறம் கூற்றாகும் என்பது நியதியாகும்.இந்த வகையில் இதற்க்கு நாம் உரிய முறையில் விடை காணவேண்டும்.

நாம் சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் எம்மிடம் பல மாணவர்கள் இளைஞர்கள் வருவார்கள் கலந்துரையாடுவார்கள்.இத்தகையவர்கள் இன்றும் கூட இங்கு இல்லா விட்டாலும் கூட வெளிநாடுகளில் நாம் செல்லும் சந்தர்ப்பங்களில் வந்து கலந்துரையாடி வருகின்றார்கள்.அவர்கள் இங்கு இருந்தால் இன்னும் பலம் மிக்கதாக இருக்கும்.ஆனாலும் இன்றும் அவாகள் வெளிநாடுகளில் இருந்து தமது பங்களிப்புக்களை நல்ல முறையில் மேற்க்கொள்கின்றார்கள்.

நாம் ஒரு சிற்றெறும்பை நாம் உலக்கியதும் அது எம்மையாருடைய பாதம் என்று பார்க்காது கடிக்கின்றது.அதே போன்று நாமும் இன்று மிதிபடுகின்றோம் அதற்க்காக சும்மா இருக்க முடியாது.

நாம் அன்று சிறையில் இருந்து வந்வேளையில் எமக்கு போடப்பட்ட மாலைகளை ஏற்க்கமாட்டோம் என்ற கூறினோம் அந்த மாலைகளை நாம் ஏலத்தில் விற்று அன்று இளைஞர்பேரவைக்கு நிதியை சேகரித்தோம்

இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன.போருக்கு செல்வதறக்கபான ஒரு தூண்டுதலாகவே அது அமைக்கின்ஙறது.போருக்கு செல்வதற்க்கான அடை அணிகளாகவே நான் அதனைப் பார்க்கின்றேன்.

எமது சிறு பிள்ளைகள் மீண்டும் ஒரு போராட்டத்திறக்கு செல்லும் நிலமைக்கு செல்லவிடாது நாம் இந்த போராட்டததை நடத்தி அவாகளை நல்ல முறையில் வாழ வழி செய்ய வேண்டியது அவசியமாகும்.

எமக்கு கிடைக்கப்’போகும் தமிழீழம் எங்கு கிடைக்க வேண்டும் என்றால் எமது மண்ணில் தான் கிடைக்க வேண்டும. இதனை விடுத்து நாம் மொழியை இழந்து மண்னை இழந்து வேறு எங்குப் பெற முடியாது.

எமது மண் நாளை அளக்கப்படப் போகின்றது.இராணுவத்தினரின் உல்லாச வாழக்கைக்காக இதனை நாம் அங்கீகரிக்க முடியாது இதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும். எனவும் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply