நான் தியாகி அல்ல. அதே நேரத்தில் நான் துரோகியும் அல்ல. ‘கத்தி’ ஆடியோ விழாவில் விஜய் ஆவேச பேச்சு (வீடியோ இணைப்பு)

kaththi_audioஉலக அளவில் பிரபலமான அர்னால்ட்டை அழைத்து வந்து பிரமாண்டமாக ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவை நடத்தி பெரும் பரபரப்பே சென்னையில் இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஒருசில தமிழ் அமைப்புகளால் பிரச்சனை ஏற்படும் என படக்குழுவினர் கருதியதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பொதுவாக அனைத்து விழாக்களிலும் அமைதியாகவும் பொறுமையாகவும் பேசும் வழக்கம் உடைய விஜய், இந்த விழாவில் சற்று ஆவேசமாக பேசினார். தன்னை தமிழினத்துரோகி என்று ஒருசிலர் கூறி வருவதற்கு அவர் தனது அதிரடி பேச்சின் மூலம் பதிலடி கொடுத்தார்.

என்னை நான் தியாகி என்று எப்போதுமே சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால் கண்டிப்பாக நான் துரோகி அல்ல. என்னுடைய படத்தில் மட்டுமே சண்டை இருக்கும். நாங்கள் சண்டை போடுவதற்காக படமெடுக்கவில்லை. மக்களின் சந்தோசத்திற்காக படமெடுத்து வருகிறோம். வதந்திகளுக்கு நான் எப்பொழுதுமெ பதில் சொல்வதில்லை. உண்மைக்கு விளக்கம் சொல்லலாம். அது தவறில்லை. ஆனால் வதந்திக்கு விளக்கம் சொன்னால் அது உண்மையாக மாறிவிடும்.

பொதுவாக என்னுடைய படத்தை பற்றி நானே பெரிதாக பேசுவதில்லை. ஆனால் இந்த படம் எனக்கு முருகதாஸுக்கு ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்துள்ளது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் நான் துரோகம் செய்ய மாட்டேன், என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு விஜய் பேசினார்.

Tags: , , ,

Leave a Reply